facebook

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி இடிப்பிற்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை - கம்மன்பில


யாழ். பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடித்து நொறுக்கப்படட  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லையென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பிளந்துகொண்ட போதே அமைச்சரவை இணை ஊடகப் ​பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில இதனைக் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரே அங்கு அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைக்க  நடவடிக்கை எடுத்ததாகவும் மீண்டும் அதனை நிர்மாணிப்பதற்கும் அவர்களே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இணை ஊடகப் ​பேச்சாளர் கூருக்கிறார்.

எது எவ்வாறாயினும் நினைவுத்தூபி இடிப்பு விடயத்தில் அரசாங்கம் எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை. அத்ததுடன் அரசாங்கத்திற்கும் இதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமைச்சர் கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments