facebook

மட்டக்களப்பில் இன்று 13 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்


மட்டக்களப்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட Antigen மற்றும் PCR பரிசோதனைகளில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இதனடிப்படையில், ஓட்டமாவடியில்  4 பேரும்,மட்டக்களப்பில் 5 பேரும், களவாஞ்சிக்குடி மற்றும் காத்தான்குடியில் தலா இருவரும் கொரோனா தோற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இதுவரை 380 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதில் 131 பேர் பூரண குணம் பெற்று தகமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அத்துடன், மேலும் 247 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பில் இதுவரை 13,687 PCR & Antigen பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments