facebook

மீண்டும் ஒரு ஜனாஸா பலவந்தமாக எரிக்கப்பட்டது - ஹபுகஸ்தலாவையில் சம்பவம்


முஸ்லீம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு உலகின் எல்லா பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையிலும் நாட்டில் பாரிய பேசுபொருளாக அது மாறி முஸ்லீம் அமைப்புக்கள் அரசியல் தலைமைகள் மற்றும் முஸ்லிமல்லாத பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வரும் இந்த நிலையில் அவை எதனையும் கண்டு கொள்ளாமல் நாட்டில் மேலும் ஒரு ஜனாஸா நேற்றைய தினம் (10) ஹபுகஸ்தலாவையில் எரிக்கப்பட்டுள்ளது. 

ஹபுகஸ்தலாவை - ஹுருவலையை சேர்ந்த சகோதரர் இர்பான் என்ற நபரின் ஜனாஸாவே இவாறு எரிக்கப்பட்டுள்ளது.

இவர் ஹபுகஸ்தலாவை ஜனாஸா சங்கத்தின் நீண்ட கால ஊழியரும் 22 வருடங்களாக மரணித்த ஜனாஸாக்களுக்கு ஊதியம் இன்றி மண்ணறை தோண்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாஸா பேராதெனிய வைத்திசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே மேற்கொண்ட PCR  பரிசோனையின் முடிவுக்கு அமைய மரணிக்க முன்னரே கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் ஜனாஸா பலவந்தமாக எரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments