facebook

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் திருத்தம் செய்ய இட‌ம‌ளிக்க‌ முடியாது, என்னால் தொடர்ந்து போராட‌ முடியாது - முபாரக் அப்துல் மஜீத்


ஏ.பி.எம்.அஸ்ஹர்
முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் 
இட‌ம‌ளிக்க‌ முடியாது என்றும், திருத்த‌த்திற்கு முய‌ற்சி செய்வ‌து நாளை காதி நீதி ம‌ன்ற‌த்தையே முழுமையாக‌ ஒழிக்க‌ செய்யும் என‌ நான் ம‌ட்டுமே நீண்ட. காலமாக உரத்துக்கூறி வருகிறேன் எனவும் எங்கெல்லாம் என் குர‌லை எழுப்ப‌ முடியுமோ அங்கெல்லாம் என் ச‌க்திக்கு அப்பால் நின்று பேசி வருகின்றேன் எனவும் உலமாககட்சியின் தலைவர் மெளலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

நீதி அமைச்ச‌ராக‌ ர‌வூப் ஹ‌க்கீம் ஆர‌ம்பித்து வைத்த‌ காதி நீதிம‌ன்ற‌ங்க‌ளை ர‌த்து செய்வ‌து என்ற‌ கோரிக்கை மீண்டும் வ‌லுப்பெற்றுள்ள‌து.


நூற்றாண்டு கால‌மாக‌ முஸ்லிம்க‌ள் அனுப‌வித்து வ‌ரும் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்துக்குரிய‌ காதி நீதிம‌ன்ற‌ம் வேண்டாம் என‌ சில‌ முஸ்லிம் பெண்க‌ளை முன் வைத்து ஹ‌க்கீம் நீதி அமைச்ச‌ராக‌ இருந்த‌ போது சொல்ல‌ப்ப‌ட்ட‌து.

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ திருத்த‌த்துக்கும் இட‌ம‌ளிக்க‌ முடியாது என்றும், திருத்த‌த்துக்கி முய‌ற்சி செய்வ‌து நாளை காதி நீதி ம‌ன்ற‌த்தையே முழுமையாக‌ ஒழிக்க‌ செய்யும் என‌ நான் ம‌ட்டுமே ச‌த்த‌மிட்டேன். எங்கெல்லாம் என் குர‌லை எழுப்ப‌ முடியுமோ அங்கெல்லாம் என் ச‌க்திக்கு அப்பால் நின்று பேசினேன்.

இந்த‌ ச‌மூக‌ம் என்னோடு நிற்க‌வில்லை. திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ வேண்டும் என்ற‌ ஹ‌க்கீம் க‌ட்சியுட‌னேயே நின்ற‌து.


எந்த‌வொரு க‌ருத்தும் ம‌க்க‌ள் ஆத‌ர‌வு பெற்ற‌ க‌ட்சியின் க‌ருத்து ம‌க்க‌ளின் க‌ருத்தாக‌வே பார்க்க‌ப்ப‌டும். அந்த‌வ‌கையில் ஹ‌க்கீமின் முன்னெடுப்புக்க‌ள் ச‌மூக‌த்தின் முன்னெடுப்பாக‌ க‌ருத‌ப்ப‌ட்ட‌து. இப்போது மீண்டும் விஸ்வ‌ரூப‌மெடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி நேற்று சிங்க‌ள‌, த‌மிழ் தொலைக்காட்சிக‌ளுக்கு நான் விள‌க்க‌ம‌ளித்தேன். என‌து முழு க‌ருத்தும் ஒளி ப‌ர‌ப்ப‌ப்ப‌ட‌வில்லையாயினும் நான் சொல்ல‌ வ‌ருவ‌தை அவை ஒளிப‌ர‌ப்பின‌. அந்த‌ தொலைக்காட்சிகு என் ந‌ன்றிக‌ள்.

உல‌மா க‌ட்சியை ஆர‌ம்பித்த‌ போது இப்ப‌டியொரு க‌ட்சி தேவையா என்றே எல்லோரும் கேட்ட‌ன‌ர். இன்று இது ப‌ற்றிப்பேச‌ உல‌மா க‌ட்சி ம‌ட்டுமே உள்ள‌தை பார்க்கும் போது அன்றே எம்மை இறைவ‌ன் இந்த‌ ச‌மூக‌த்தின் குர‌லாக‌ தேர்ந்தெடுத்துள்ளான் என்ப‌து புரிகிற‌து.

என்னால் எவ்வ‌ள‌வோ போராட‌ முடியுமோ அவ்வ‌ள‌வு த‌னித்து நின்று போராடி விட்டேன். இத‌ற்கு மேல் என‌து உட‌ல் இட‌ம் கொடுக்க‌ ம‌றுக்கிற‌து.

ச‌மூக‌ம், உண்மை, நேர்மை, வெளிப்ப‌டை, ப‌ண‌த்துக்கும் ப‌க‌ட்டுக்கும் ம‌ய‌ங்காத‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளை ப‌ல‌ப்ப‌டுத்தாத‌ வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌த்தின் எதிர்கால‌ உரிமைக‌ள் கேள்விக்குறிதான்.

Post a Comment

0 Comments