facebook

500 பேருக்கு கொரோனா உறுதி - நாளுக்குநாள் தீவிரமடையும் பரவல்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 535 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 840 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், மினுவாங்கொடை -பேலியகொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 44 ஆயிரத்து 82 ஆக காணப்படுகிறது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 521 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 838 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று குறித்த சந்தேகத்தின் பேரில் 723 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளமை இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கல்கிஸ்ஸ, காத்தான்குடி, வெல்லம்பிட்டிய மற்றும் ஓபநாயக்க ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 229 ஆக உயர்வடைந்துள்ளது.

Post a Comment

0 Comments