facebook

மூதூரில் 14 வயது சிறுமி துஷ்பிரயோகம் - சந்தேக நபருக்கு விளக்கமறியல்


14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோசகம் செய்த குற்றச்சாட்டில்  ஒருவரை  இம்மாதம் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை  மூதூர் நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தோப்பூர் பகுதியை சேர்ந்த 38 வயதான குறித்த சந்தேங்க நபர் அந்த சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

சந்தேக நபருக்கு ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments