facebook

கொரோனா தோற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 70 மாணவர்கள் தனிமைப்படுத்தலில்


மன்னார் - எருக்கலம்பிட்டி கிராமத்தில் கொரோனா தொற்றாளர்களாக  அடையாளம் காணப்பட்ட 5 பேருடன் தொடப்புகளை பேணிய 70 பாடசாலை மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்டான்லி டி மெல் இதனை தெரிவித்துள்ளார்..

எருக்கலம்பிட்டி கிராமத்தில் குறித்த 5 தோற்றாளர்களுடன் தொடர்புகளை பேணிய 113 பேர் மொத்தமாக  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில்  70 பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள்  அடுத்த வாரமே பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments