facebook

உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது - இதுவரை 240 கொரோனா மரணங்கள் பதிவு


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக இருந்தது. அத்துடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 8 மரணங்களுடன்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக  உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அறிவிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு;

வெலிக்கடை சிறைக் கைதி ஒருவர் ( 62 வயது)

ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் (61 வயது)

மட்டக்குளிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் (45 வயது)

கொழும்பு 12 ஐச் சேர்ந்த பெண்ணொருவர்

கொழும்பு 14ஐச் சேர்ந்த ஒருவர் (51 வயது)

பண்டாரகமை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ( 70 வயது)

காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் (57 வயது)

களுத்தறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த ஒருவர்  (67 வயது)


இவர்களில் ஒருவர் இன்றைய தினமும் -11-, 3 பேர் நேற்றும் -10-, 2 பேர் கடந்த வெள்ளிக்கிழமையும் -08-, கடந்த 2 பேர் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் உயிரிழந்தவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு : நேற்று முன்தினம் (10) நாவலப்பிடி, ஹபுகஸ்தவையில் மரணித்து எரிக்கப்பட்ட முஸ்லிம் நபரின் ஜனாஸா பற்றிய விபரம் கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் பட்டியலில் இதுவரை இணைத்துக் கொல்லப்படவில்லை.

Post a Comment

0 Comments